/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குருபெயர்ச்சி விழா கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
/
குருபெயர்ச்சி விழா கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
ADDED : ஏப் 30, 2024 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:குரு பகவான், இன்று மாலை, மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குரு கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் உள்ளிட்டவை நடக்கிறது.
காஞ்சிபுரம் கமலாம்பிகை சமேத காயாரோகணீஸ்வரர் கோவிலில், இன்று, மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடக்கிறது.
உக்கம்பெரும்பாக்கம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், குரு பெயர்ச்சியையொட்டி, தாரை சமேத தேவ குரு பகவானுக்கு இன்று, மாலை 5:00 மணிக்கு மேல் விசேஷ அபிஷேக அலங்கார மகா தீபாராதனைகள் நடைபெறுகின்றன.