/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஜூலை 02, 2024 12:41 AM

காஞ்சிபுரம் : உத்திரமேரூர் ஒன்றி யம், புத்தளி கிராமத்தில்,சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. சிறிய அளவில் இருந்த இக்கோவிலை சற்று பெரிய அளவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர், திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, வேறோரு இடத்தில் புதியதாக கோவில் கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைதுவங்கியது.
நேற்று, காலை 9:00 மணிக்கு கலசம் புறப்பாடும், காலை 10:00 மணிக்கு கோவில் கோபுரத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பா பிஷேகம் நடைபெற்றது.
விழாவில், புத்தளி, காவாம்பயிர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள்பங்கேற்றனர்.