/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழித்தடம் இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீர்
/
வழித்தடம் இல்லாததால் தேங்கி நிற்கும் கழிவுநீர்
ADDED : ஆக 04, 2024 01:40 AM

நரப்பாக்கம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், நரப்பாக்கம் ஊராட்சி, ஆளவந்தார்மேடு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து விடப்படும் கழிவுநீர் வெளியேறும் வகையில், கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயில் விடப்படும் கழிவுநீர் முழுதும் வெளியேறும் வகையில், வழித்தடம் ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், பாதியிலேயே ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கழிவுநீர் கால்வாய் முழுமையாக வெளியேறும் வகையில், வழித்தடம் ஏற்படுத்த வேண்டும் என, ஆளவந்தார்மேட்டினர் வலியுறுத்தி உள்ளனர்.