/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 88 தங்கத்துடன் சென்னை 'சாம்பியன்'
/
மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 88 தங்கத்துடன் சென்னை 'சாம்பியன்'
மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 88 தங்கத்துடன் சென்னை 'சாம்பியன்'
மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் 88 தங்கத்துடன் சென்னை 'சாம்பியன்'
ADDED : மே 07, 2024 09:46 PM

சென்னை:மாநில கிக் பாக்சிங் போட்டியில், சென்னை மாவட்ட அணி, 88 தங்கம் உட்பட 112 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச்சென்றது.
தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், மாநில கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் - 2024 போட்டி, செங்கல்பட்டு, மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் நடந்தது.
இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட, தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து, பயிற்சியாளர்கள், 900 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
போட்டிகள், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என, மூன்று பிரிவுகளில், ஏழு வகையாக சண்டை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைத்து போட்டிகள் முடிவில், சென்னை மாவட்ட அணி, 88 தங்கம், எட்டு வெள்ளி, 16 வெண்கலம் என, மொத்தம் 112 பதக்கங்களுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.
அடுத்து, திருவள்ளூர் மாவட்டம், 21 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலத்துடன் இரண்டாம் இடத்தையும், 21 தங்கம், தலா எட்டு வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கங்களுடன் காஞ்சிபுரம் மூன்றாம் இடத்தையும் வென்றன.
போட்டியில் வெற்றி பெற்றவர்கள், இம்மாதம் 21ல் புனேவில் துவக்க உள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளனர்.

