/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு சாலையில் வடியும் கழிவுநீரால் சீர்கேடு
/
மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு சாலையில் வடியும் கழிவுநீரால் சீர்கேடு
மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு சாலையில் வடியும் கழிவுநீரால் சீர்கேடு
மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு சாலையில் வடியும் கழிவுநீரால் சீர்கேடு
ADDED : மார் 15, 2025 12:49 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர், அப்பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்காக, மழைநீர் வடிகாலில் மண்ணை கொட்டி மூடினார்.
இதனால், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும், வீட்டு உபயோக கழிவுநீர், சீராக வடிந்து வெளியேற வழின்றி, வடிகால் நிரம்பி சாலையில் வடிந்து தேங்கி நிற்கிறது.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு கடி தொல்லையில் அப்பகுதி மக்கம் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ மாணவியர், முதியோர் உட்பட அனைவரும் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
மேலும், பருவ மழை காலங்களில், மழைநீர் வடிய வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அப்பகுதியல் ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.