/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சின்ன காஞ்சியில் தெருநாய் தொல்லை
/
சின்ன காஞ்சியில் தெருநாய் தொல்லை
ADDED : பிப் 24, 2025 12:57 AM

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெரு, வரதராஜபுரம், கே.எம். அவென்யூ உள்ளிட்ட பகுதியில், 25க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறித்து நிற்கும் நாய்கள், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளை குரைக்கின்றன. சைக்கிள் மற்றும் டூ - வீலரில் செல்வோரை குரைத்தபடியே நாய்கள் விரட்டி செல்வதால், பதற்றமடையும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
இதனால், இவ்வழியாக செல்லும் சிறுவர்கள் மட்டுமின்றி, பெரியவர்களும், அச்சத்துடன் சென்று வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில், சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

