/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கருமாரியம்மன் கோவிலில் தெருவீதி உலா விமரிசை
/
கருமாரியம்மன் கோவிலில் தெருவீதி உலா விமரிசை
ADDED : ஆக 12, 2024 10:22 PM

ஸ்ரீபெரும்புதுார் : குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் கிராமத்தில், கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடிமாதம் நான்காம் வாரம் கூழ்வார்த்தல் மற்றும் அம்மன் வீதியுலா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டு விழாவை நடத்த, கிராமத்தினர் சார்பாக முடிவு செய்யப்பட்டு, கடந்த 9ம் தேதி காப்பு கட்டப்பட்டது.
நேற்று முன்தினம் காலை கோவில் குளத்தில் இருந்து வந்த அலங்கரிக்கப்பட்ட பூங்கரகத்தை பக்தர்கள் வழிபட்டனர். பின், மதியம் கூழ்வார்த்தல் நடைபெற்றது.
இரவு 9:00 மணிக்கு மலரால் அலங்கரிக்கப்பட்ட கருமாரியம்மனின் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வணங்கினர். அதன்பின், கும்பம் படையலிடப்பட்டது.

