/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செரப்பனஞ்சேரி கோவிலை புனரமைக்க போரிக்கை
/
செரப்பனஞ்சேரி கோவிலை புனரமைக்க போரிக்கை
ADDED : செப் 07, 2024 11:08 PM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, செரப்பனஞ்சேரியில் பழமையான வீமீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவில் 2,000 ஆண்டுக்கு முன் குலோத்துங்க மன்னரால் கட்டபட்டது. 27 நட்சத்திரங்களுக்கு, வின் மீன்களுக்கும் அதிபதியானதால் வீமீஸ்வர் என்று இத் ஸ்தலம் அழைக்கப்படுகிறது.
சூரிய பகவானுக்கு அருள்பாலித்ததால், இக் கோவிலில் சூரிய பகவான் தனியாக மேற்கு நோக்கி சிவப்பெருமானை வணங்கியதாக வரலாறு குறிப்பிடுகிறது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோவிலில், பல ஆண்டுகளாக எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால், கோவில் கோபுரம் மற்றும் சுவர் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்துள்ளது.
மேலும், பக்தர்கள் பங்களிப்புடன் பிரதோஷம், சிவராத்திரி விழா உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. 2,000 ஆண்டு பழமையான இக்கோவிலை, அறநிலையத் துறை கண்டும் காணாமல் உள்ளது.
எனவே, இந்த கோவிலை, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.