ADDED : ஏப் 23, 2024 03:50 AM
ஸ்ரீபெரும்புதுார் : செங்காட்டில், கோவில் திருவிழாவின் போது நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற ஆறாம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த செங்காடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 45. இவரது மகன் சாமியப்பன், 12, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று, அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடந்தது. முத்து வீராசாமி கோவில் குளத்தில், சாமியப்பன் நண்பர்களுடன் குளித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி சாமியப்பன் பலியானார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவில் திருவிழாவின் போது, குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

