ADDED : ஏப் 09, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பகுதியில் உள்ள காஞ்சி காமாட்சி நகரைச் சேர்ந்தவர் அருள். இவரது மகன் தர்ஷன், 18; பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், தன் தாயாரை, 'ஸ்கூட்டி பெப்' இருசக்கர வாகனத்தில் நேற்று, காலை 8:30 மணியளவில் அழைத்துக் கொண்டு, டோல்கேட்டில் இறக்கி விட்டு, மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
தேனம்பாக்கம் வேகவதி ஆறு அருகே சென்றபோது, எதிரே வந்த டாரஸ் லாரி, தர்ஷன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தாலுகா போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

