/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மொபைல் போனில் மின்சாரம் பாய்ந்து மாணவர் 'சீரியஸ்'
/
மொபைல் போனில் மின்சாரம் பாய்ந்து மாணவர் 'சீரியஸ்'
ADDED : மார் 28, 2024 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுல்லைவாயில்:திருமுல்லைவாயில், நாகம்மை நகர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ், 17. பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ளார்.
இவர், நேற்று முன்தினம் மாலை, மொட்டை மாடியில் நின்று, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டருகே சென்ற உயரழுத்த மின் கம்பியால் ஈர்க்கப்பட்டு, உடல் கருகிய நிலையில் சந்தோஷ் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீதம் உடல் கருகிய நிலையில், சந்தோஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

