/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குன்றத்தூரில் நிழற்கூரை இல்லை மழையில் நனையும் மாணவர்கள்
/
குன்றத்தூரில் நிழற்கூரை இல்லை மழையில் நனையும் மாணவர்கள்
குன்றத்தூரில் நிழற்கூரை இல்லை மழையில் நனையும் மாணவர்கள்
குன்றத்தூரில் நிழற்கூரை இல்லை மழையில் நனையும் மாணவர்கள்
ADDED : ஆக 28, 2024 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் அரசு ஆண்கள் பள்ளி அருகே பூந்தமல்லி, போரூர், குன்றத்துார், மலையம்பாக்கம் ஆகிய நான்கு சாலைகள் சந்திக்கும் கூட்டுச்சாலை உள்ளது.
இந்த சந்திப்பில் உள்ள நிறுத்தத்தில் இருந்து பூந்தமல்லி, போரூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணியர் செல்கின்றனர்.
இந்நிறுத்ததில், போதிய நிழற்கூரை இல்லை. இதனால், மாணவர்கள், வயதானோர் உள்ளிட்ட பயணியர், கால் கடுக்க நிற்கின்றனர்; மழை, வெயிலில் அவதிப்படுகின்றனர்.
இந்த நிறுத்தத்தில் இருக்கை வசதியுடன் நிழற்கூரைகளை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.