/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீச்சல் குளமான திருமுக்கூடல் சாலை
/
நீச்சல் குளமான திருமுக்கூடல் சாலை
ADDED : ஆக 06, 2024 01:58 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து பழையசீவரம் செல்லும் சாலை வளைவில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக கனரக வாகனங்கள், தொழிற்சாலை பேருந்துகள் அதிகளவில் சென்றதால் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பள்ளத்தை மண் மட்டும் கொட்டி தற்காலிகமாக சீரமைத்து வருகின்றனர்.
மழை நேரங்களில், இச்சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அப்பகுதியினர் மற்றும் மாணவ - மாணவியர், இச்சாலை பள்ளத்தால் தினசரி அவதிப்படுகின்றனர்.
சாலை பள்ளத்தின் தண்ணீர் தேக்கத்தால் கொசு உற்பத்தி உள்ளிட்ட சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பள்ளமான இச்சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.