ADDED : ஆக 23, 2024 07:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தியாகி நிதி நாடும் நடுநிலைப் பள்ளியில், மாணவ -- -மாணவியருக்கான திறமை திருவிழா நேற்று, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி தலைமையில் நடந்தது.
பல்வேறு தன்னார்வ அமைப்பு சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாணவர்களின் கடமை, ஒழுக்கம், கல்வி, லட்சியம் ஆகிய தலைப்புகளில் பேச்சு, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் பதக்கமும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ- - மாணவியருக்கும் பங்கேற்பு பாராட்டு சான்றிதழ், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன,
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சென்னை உமா பவுண்டேஷன், சர்வம், காஞ்சி அன்னசத்திரம், விழுதுகள், பசுமை இந்தியா உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் செய்திருந்தனர்.

