/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அகில இந்திய 'சாப்ட் பால்' போட்டியில் தமிழக வீரர்கள்
/
அகில இந்திய 'சாப்ட் பால்' போட்டியில் தமிழக வீரர்கள்
அகில இந்திய 'சாப்ட் பால்' போட்டியில் தமிழக வீரர்கள்
அகில இந்திய 'சாப்ட் பால்' போட்டியில் தமிழக வீரர்கள்
ADDED : ஏப் 10, 2024 10:02 PM
சென்னை:தமிழ்நாடு சாப்ட் பால் சங்கம் சார்பில், மண்டலங்களுக்கு இடையிலான அகில இந்திய சாப்ட் பால் சாம்பியன்ஷிப் போட்டி, சேலத்தில் நாளை மறுதினம் துவங்க உள்ளது. இதில், நாட்டின் தெற்கு, மேற்கு, வடக்கு, மத்திய ஆகிய நான்கு மாநிலத்தில் இருந்து, இருபாலர் அணிகள் பங்கேற்கின்றன.
இதில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்கள் சார்பில், இருபாலரிலும் தென் மாநில அணிகளாக பங்கேற்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து, தலா ஒரு வீரர் என, ஒரு அணியில் 16 வீரர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து, சென்னையைச் சேர்ந்த, வீரர் ஆனந்த் மற்றும் வீராங்கனை அப்ரீன் ஆகிய இருவரும் பங்கேற்கின்றனர்.
இவர்களுடன், தென் மாநில அணியின் மேலாளராக ராஜேந்திர பிரபு இடம்பெற்றுள்ளார்.