/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பொய் வழக்கு பதிந்ததாக போலீஸ் மீது புகார் கண்ணீர் விடும் பெரும்பாக்கம் குடும்பத்தினர்
/
பொய் வழக்கு பதிந்ததாக போலீஸ் மீது புகார் கண்ணீர் விடும் பெரும்பாக்கம் குடும்பத்தினர்
பொய் வழக்கு பதிந்ததாக போலீஸ் மீது புகார் கண்ணீர் விடும் பெரும்பாக்கம் குடும்பத்தினர்
பொய் வழக்கு பதிந்ததாக போலீஸ் மீது புகார் கண்ணீர் விடும் பெரும்பாக்கம் குடும்பத்தினர்
ADDED : பிப் 25, 2025 11:40 PM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 29. சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்தாண்டு அக்., 30ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்று, இரவு 9:30 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பக்கத்து ஊரான முத்துவேடு கிராமத்தில், தனக்கு சொந்தமான கழனியை பார்க்க சென்றார். அங்கு, மணல் கடத்தல் தொடர்பாக, அங்கிருந்தவர்களை பெருமாள் கேட்டுள்ளார். இதனால், பெருமாளுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின், முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்த விக்கி என்பவர், பெருமாளுக்கு போன் செய்து நேரில் வருமாறு கூறியுள்ளார். இதை தொடர்ந்து, பெருமாள், அண்ணன் வெங்கடேசன், தாய் தெய்வானை, அக்கா அன்னக்கிளி ஆகிய நான்கு பேர் சென்றுள்ளனர்.
அங்கிருந்த விக்கி, அபிஷேக், பிரசன்னா, அசோக், ஆபாவாணன் உள்ளிட்டோர், பெருமாளை தலையில் வெட்டியதோடு, வெங்கடேசனை கட்டையால் தாக்கினர். இதில், படுகாயமடைந்த இருவரும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், விக்கி, அபிஷேக், பிரசன்னா, அசோக், ஆபாவாணன் ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அதேசமயம், தலையில் வெட்டப்பட்ட பெருமாள் மற்றும் அவரது தாய், சகோதரர், அக்கா ஆகிய நான்கு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும்பாக்கம் கிராமத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், தங்கள் குடும்பத்தின் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலகத்தில், பெருமாள், தனது தாய், அக்கா, சகோதரனுடன் நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினார்.
அதன்பின் அவர் அளித்த மனு விபரம்:
முத்துவேடு கிராமத்தில் மணல் கடத்தலை தட்டி கேட்டதற்கு, என் தலையில் பட்டா கத்தியால் வெட்டினர். எங்களை கொலை செய்ய வந்த 20 பேர் மீது நடவடிக்கை எடுக்காமல், எங்கள் மீதும் பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொய்யான வழக்குப்பதி செய்ததால், மொபைல் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்தேன். உதவி ஆய்வாளர் என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கியதும், மற்றொரு உதவி ஆய்வாளர் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தது பற்றியும், ஆய்வாளர் எங்களை கைது செய்த விதம் பற்றியும், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் எஸ்.பி., ஆகியோரிடம் மனு அளித்து வருகிறோம்.
ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட எங்களை குடும்பத்தோடு கைது செய்ததால், அக்காவின் திருமணமும் நின்றுவிட்டது. இதன் காரணமாக, மன உளைச்சலில் உள்ளோம். பொய் வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.