ADDED : ஏப் 12, 2024 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்,:காஞ்சிபுரம்- - உத்திரமேரூர் சாலையில், மணல்மேடு அருகே, மாநகரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் மடக்கி சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் அவர், உத்திரமேரூர் ஒன்றியம், புத்தளி கிராமத்தைச் சேர்ந்த மாதவன் 21 என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மாதவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் காவல் சிறையில் அடைத்தனர்.

