/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சியின் செயல்பாடுகள் வலைதளங்களில் தெரிவிக்க டெண்டர்
/
மாநகராட்சியின் செயல்பாடுகள் வலைதளங்களில் தெரிவிக்க டெண்டர்
மாநகராட்சியின் செயல்பாடுகள் வலைதளங்களில் தெரிவிக்க டெண்டர்
மாநகராட்சியின் செயல்பாடுகள் வலைதளங்களில் தெரிவிக்க டெண்டர்
ADDED : செப் 17, 2024 06:10 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் செயல்பாடுகள், திட்டங்களின் முன்னேற்றம், புதிய திட்டங்களின் பணிகள் பற்றி, நகரவாசிகளுக்கு தெரியப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகள், அதிகாரிகளின் ஆய்வு, மேயரின் செயல்பாடுகள், திட்டங்களின் தற்போதைய நிலை போன்றவை குறித்து, பேஸ்புக், எக்ஸ், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தெரியப்படுத்த தனியார் நிறுவனம் மூலம் பணியை மேற்கொள்ள உள்ளது.
இதற்காக, தனியார் நிறுவனத்திற்கு 9.9 லட்ச ரூபாய் மதிப்பில் பணி உத்தரவு வழங்குவதற்காக முன்னதாக, டெண்டர் விடப்பட்டுள்ளது.