/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதலமைச்சர் கோப்பை இன்று பதிவுக்கு ஏற்பாடு
/
முதலமைச்சர் கோப்பை இன்று பதிவுக்கு ஏற்பாடு
ADDED : ஆக 24, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு சிறப்பு முகாம், காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அருங்க வளாகத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
எனவே, விளையாட்டு வீரர்கள் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆகியோர் ஆக., 24, 25 ஆகிய இரு நாட்களில் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு 74017 03481 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விதெரிவித்துள்ளார்.

