/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதியவரின் உயிரை காவு வாங்கிய 'பள்ளம்'
/
முதியவரின் உயிரை காவு வாங்கிய 'பள்ளம்'
ADDED : செப் 09, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை, மடிப்பாக்கம்,லட்சுமி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சந்திராச்சேரி, 68. இவர், மேற்கு தாம்பரத்தில் பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா ஆக்டிவா'இருசக்கர வாகனத்தில் உள்ளகரம், ராமமூர்த்தி நகர் அருகே சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தார். அதில், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.