/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அமைச்சர் உதயநிதியை சந்திக்க சென்ற காஞ்சி கவுன்சிலர்கள் அறிவாலயத்தில் மனு அளித்து திரும்பினர்

ADDED : ஜூலை 12, 2024 09:10 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீது, தி.மு.க.,- - அ.தி.மு.க., - -காங்., - சுயேட்., - பா.ம.க., என, 33 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கமிஷனரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில், வரும் 29ம் தேதி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான கூட்டம் மற்றும் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகளில், கமிஷனர் செந்தில்முருகன் ஈடுபட்டு வருகிறார். மேயர் தரப்பு, தனக்கான ஆதரவு கவுன்சிலர்களிடம் பேசி வருகின்றனர். அதிருப்தி கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தி.மு.க., கவுன்சிலர்கள், பெண் கவுன்சிலர்கள், அவரது கணவர்கள் என 30க்கும் மேற்பட்டோர், அமைச்சர் உதயநிதியை சந்தித்து முறையிட சென்னைக்கு சென்றுள்ளனர்.
அமைச்சர் உதயநிதி குடியிருப்பு உள்ள குறிஞ்சி இல்லத்திற்கு சென்றபோது, அவரை கவுன்சிலர்கள் சந்திக்க முடியாமல் போயுள்ளது. இதனால், அண்ணா அறிவாலயம் சென்றுள்ளனர்.
அங்கு, கட்சி அலுவலகத்திற்குள் சென்ற கவுன்சிலர்கள், அங்கிருந்த அமைப்பு செயலர் அன்பகம் கலையை சந்தித்து, மனு அளித்தனர்.
மனுவில், மாநகராட்சி நிர்வாகம், மேயர் மகாலட்சுமி, கணவர் யுவராஜா ஆகியோரது செயல்பாடுகள் பற்றி தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.