/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிலாளர் விடுதியில் கட்டுமான பணி அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
/
தொழிலாளர் விடுதியில் கட்டுமான பணி அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
தொழிலாளர் விடுதியில் கட்டுமான பணி அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
தொழிலாளர் விடுதியில் கட்டுமான பணி அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
ADDED : ஆக 01, 2024 01:05 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் தாலுகாவில், இருங்காட்டுகோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில், 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள் உள்ளன.
இங்கு, மோட்டார் வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள், டயர், கண்ணாடி, ரசாயணம், மருத்துவ சாதனங்கள் போன்றவை தயாரிக்கும், 1,000க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.
இதில், வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆண்டுக்கு 70,000 கோடி ரூபாய் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், குறைந்த விலையில் வாடகைக்கு தங்குவதற்கு, வல்லம்- வடகல் சிப்காட்டில், 20 ஏக்கர் பரப்பளவில், 706.50 கோடி ரூபாய் மதிப்பிட்டில், 18,720 படுக்கைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை, சிப்காட் நிறுவனம் கட்டி வருகிறது.
இதை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், ஆய்வு மேற்கொண்டார்.
அடுக்குமாடி குடியிருப்பின் வசதிகள் மற்றும் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.