/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொசு மருந்து புகை அடிப்பு பணி மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்
/
கொசு மருந்து புகை அடிப்பு பணி மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்
கொசு மருந்து புகை அடிப்பு பணி மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்
கொசு மருந்து புகை அடிப்பு பணி மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்
ADDED : ஆக 25, 2024 12:50 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், ஒரு வாரத்திற்கு முன், இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியதால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே பருவநிலை மாற்றம் காரணமாகடெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.
தற்போது, மழைகாரணமாக, காஞ்சிபுரத்தில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கொசு மருந்து புகை அடிக்கும் பணி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சின்ன காஞ்சி புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் புவனேஸ் வரன் தலைமையிலான, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் 4வது மண்டலத்தில் உள்ள தெருக்களிலும் மற்றும் ஒவ்வொரு வீடாக சென்று நேற்று, கொசு மருந்து அடித்தனர்.