/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பழையசீவரம் அங்கன்வாடி மையம்
/
ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பழையசீவரம் அங்கன்வாடி மையம்
ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பழையசீவரம் அங்கன்வாடி மையம்
ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பழையசீவரம் அங்கன்வாடி மையம்
ADDED : மார் 04, 2025 01:52 AM

வாலாஜாபாத், வாலாஜாபாத்ஒன்றியம், பழையசீவரம் பெரியகாலனியில் அங்கன்வாடி மையம்உள்ளது.
இந்த அங்கன்வாடியில், கடந்த ஆண்டுகளில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக இரண்டு மையமாக்கப்பட்டு தற்போது ஊராட்சிக்கான நுாலகத்தில்ஒரு அங்கன்வாடி மையம் இயங்குகிறது.
நுாலகத்தில்இயங்கும் அங்கன்வாடி மையத்திற்கு புதியகட்டட வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.
அதன்படி, புதியஅங்கன்வாடி மையம் ஏற்படுத்த, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புதிட்டத்தின் கீழ்,12 லட்சம் ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணி துவங்கப்பட்டு, 2023ம் ஆண்டு பணி முடிவுற்றது. பணி முழுமையாக நிறைவு பெற்றுஓராண்டாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதுகுறித்து,அப்பகுதியினர்கூறியதாவது,
புதிதாக கட்டி உள்ள அங்கன்வாடி மையவளாகப் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து, கால்நடை கொட்டகைமற்றும் குப்பை குவிக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், சமூகவிரோதிகள் பயன்படுத்தும் கூடாரமாகஉள்ளது.
எனவே, ஊராட்சிசார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கன்வாடி மையம் சென்றுவர வழிபாதை ஏற்படுத்தி விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,
இவ்வாறு அவர்கள்கூறினர்.