ADDED : மே 30, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு, 70. இவர், கருப்பாகத்தில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் மற்றும் மருமகள் ஓட்டேரி பகுதியில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், பிற்பகல் 12:30 மணிக்கு, பாபு அப்பகுதி மயானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மயக்கமுற்று அவர் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள குருமஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாபு, நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.