/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் பேனர் கலாச்சாரம் வேடிக்கை பார்க்கும் பேரூராட்சி
/
உத்திரமேரூரில் பேனர் கலாச்சாரம் வேடிக்கை பார்க்கும் பேரூராட்சி
உத்திரமேரூரில் பேனர் கலாச்சாரம் வேடிக்கை பார்க்கும் பேரூராட்சி
உத்திரமேரூரில் பேனர் கலாச்சாரம் வேடிக்கை பார்க்கும் பேரூராட்சி
ADDED : பிப் 28, 2025 12:47 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, செங்கல்பட்டு சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலைகளில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், உத்திரமேரூரில் உள்ள தாலுகா அலுவலகம், பி.டி.ஒ., அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு, வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலைகளின் ஓரத்தில், அரசியல் கட்சியினர், வணிக நிறுவத்தினர் விளம்பர பேனர் வைத்து வருகின்றனர்.
இந்த பேனர்களால் சாலைகளில் செல்லும், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
விபத்து ஏற்படுத்தும் விதத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றாமல், பேரூராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருகிறது.
எனவே, சாலையோரங்களில் பேனர் வைப்பது குறித்து, நீதிமன்றம் அளித்த உத்தரவுகளை மதித்து, மாவட்ட நிர்வாகம் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.