/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துாங்கி கொண்டிருந்த இளைஞர் படுகொலை திருவேற்காடில் நள்ளிரவில் பயங்கரம்
/
துாங்கி கொண்டிருந்த இளைஞர் படுகொலை திருவேற்காடில் நள்ளிரவில் பயங்கரம்
துாங்கி கொண்டிருந்த இளைஞர் படுகொலை திருவேற்காடில் நள்ளிரவில் பயங்கரம்
துாங்கி கொண்டிருந்த இளைஞர் படுகொலை திருவேற்காடில் நள்ளிரவில் பயங்கரம்
ADDED : ஏப் 11, 2024 12:19 AM

திருவேற்காடு:ருவேற்காடு, சுந்தரசோழபுரம், செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த், 20; பிளம்பர்.
நேற்று நள்ளிரவு 1:30 மணி அளவில், இவரது வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், போலீஸ் எனக் கூறி கதவை தட்டி உள்ளனர்.
அவரது தாய் சத்யா கதவை திறந்தபோது, அவரை தள்ளிவிட்டு, மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில், அங்கு துாங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை சரமாரியாக வெட்டினர். தடுக்க சென்ற தாய் சத்யாவிற்கும் வெட்டு விழுந்தது.
விஜயகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவேற்காடு போலீசார் விஜயகாந்த் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயமடைந்த சத்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, 23, என்பவரை, நண்பர்கள் எட்டு பேருடன் சேர்ந்து விஜயகாந்த் வெட்டியுள்ளார்.
இதையடுத்து, இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று நள்ளிரவு வீடு புகுந்த ஆரோக்கியசாமி, தன் கூட்டாளிகளான திருவேற்காடைச் சேர்ந்த சரவணன், 20, மற்றும் விக்னேஷ், 20, ஆகியோருடன் சென்று, விஜயகாந்தை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
கொலை நடந்த மூன்று மணி நேரத்தில், குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பாராட்டினார்.

