/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு திருக்காலிமேடில் புதிய மின்மாற்றி
/
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு திருக்காலிமேடில் புதிய மின்மாற்றி
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு திருக்காலிமேடில் புதிய மின்மாற்றி
மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு திருக்காலிமேடில் புதிய மின்மாற்றி
ADDED : ஆக 06, 2024 01:48 AM

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி, 21வது வார்டு, திருக்காலிமேடு ஆதிதிராவிடர் குடியிருப்பில், 35க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்த பிரச்னை இருந்து வந்தது. இதனால், வீட்டில் உள்ள மின்விளக்குகள் போதுமான வெளிச்சம் இல்லாமலும், மின்விசிறி, மிக்ஸி, ஏ.சி., உள்ளிட்ட மின்சாதனங்கள் இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இப்பகுதியில் மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், வடக்கு கோட்டம், சிவகாஞ்சி மின்வாரியம் சார்பில், இப்பகுதிக்கு 25 கே.வி.ஏ., திறன்கொண்ட புதிதாக 'டிரான்ஸ்பார்மர்' எனப்படும் மின்மாற்றி நேற்று அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, பல ஆண்டுகளாக நீடித்து வந்த குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், திருக்காலிமேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.