/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்டெய்னரில் மயங்கி விழுந்த கிளீனர் பலி
/
கன்டெய்னரில் மயங்கி விழுந்த கிளீனர் பலி
ADDED : ஆக 27, 2024 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்,
வல்லம் சிப்காட்டில் இருந்து, இரு சக்கர வாகனங்களை ஏற்றிக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் ஒன்று உத்திரபிரதேசம் புறப்பட்டது.
கன்டெய்னரை உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த புஷார், 40, ஓட்டினார். கிளீனர் ரிஷவன், 32,உடனிருந்தார்.
கன்டெய்னர் லாரி, ஒரகடம் மேம்பாலம் அருகே வந்த போது, கிளீனர் ரிஷவன் திடீரென மயங்கினார்.
இதையடுத்து, அவரை, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.