/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எல்லம்மன் கோவில்களில் நாளை தெப்போற்சவம்
/
எல்லம்மன் கோவில்களில் நாளை தெப்போற்சவம்
ADDED : மே 06, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, ஊத்துக்காடு எல்லம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறும்.
நடப்பாண்டு, சித்திரை பிரம்மோற்சவ விழா, ஏப்., 28ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா வெகுவிமரிசையாக துவங்கியது. இந்த பிரம்மோற்சவத்தின், 10வது நாள் திருவிழாவான நாளை, தெப்போற்சவ விழா நடைபெற உள்ளது.
தெப்போற்சவத்தில், ஊத்துக்காடு எல்லம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
அதேபோல, நத்தாநல்லுார் கிராமத்திலும், நாளை ஊத்துக்காடு எல்லம்மன் கோவில் தெப்போற்சவ விழா நடைபெற உள்ளது.