/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புறம்போக்கில் பட்டா கேட்கும் இரு தரப்பால் சலசலப்பு
/
புறம்போக்கில் பட்டா கேட்கும் இரு தரப்பால் சலசலப்பு
புறம்போக்கில் பட்டா கேட்கும் இரு தரப்பால் சலசலப்பு
புறம்போக்கில் பட்டா கேட்கும் இரு தரப்பால் சலசலப்பு
ADDED : ஆக 09, 2024 10:34 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், காலீஸ்வரர் கோவில் பின்புறம் தனிநபர் ஒருவரின் ஆக்கிரமிப்பில் இருந்த, நத்தம் புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றம் செய்த அந்த இடத்தில், அதே பகுதியை சேர்ந்த வீட்டுமனை பட்டா இல்லாத சிலர், குடிசை வீடுகள் கட்டுவதற்கான முதற்கட்ட பணியை நேற்று துவக்கினர்.
இதற்கு அந்நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர், எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதுகுறித்து அப்பகுதி ஊராட்சி தலைவி எழிலரசி மீது சாலவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, குருமஞ்சேரி ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், நேற்று சாலவாக்கம் காவல் நிலையம் முன் குவிந்தனர்.
சீட்டணஞ்சேரியில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மனை பட்டா இல்லாதவர்களுக்கு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகரன், சாலவாக்கம் உதவி காவல் ஆய்வாளர் செந்தில் ஆகியோர், இருதரப்பினர் இடையே விசாரணை செய்தனர்.
நில ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் வீட்டுமனை பட்டா தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடத்தில் முறையிடுமாறு, போலீசார் அறிவுறுத்தினர்.

