/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடைசி வினாடி வரை 'திக்... திக்' கூடைப்பந்தில் புளூ ஸ்டார் வெற்றி
/
கடைசி வினாடி வரை 'திக்... திக்' கூடைப்பந்தில் புளூ ஸ்டார் வெற்றி
கடைசி வினாடி வரை 'திக்... திக்' கூடைப்பந்தில் புளூ ஸ்டார் வெற்றி
கடைசி வினாடி வரை 'திக்... திக்' கூடைப்பந்தில் புளூ ஸ்டார் வெற்றி
ADDED : ஏப் 26, 2024 11:20 PM

சென்னை:தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ஆதரவுடன், சென்னை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து சங்கம் நடத்தும் 18வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், கடந்த 22ம் தேதி துவங்கின. இருபாலருக்குமான போட்டியில், ஆண்கள் பிரிவில், 75 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்றுள்ளன.
சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கு மற்றும் தி.நகர், வெங்கட் நாராயணா சாலை மாநகராட்சி திடல் ஆகிய இரு இடங்களில் நடக்கும் இப்போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' அடிப்படையில் நடக்கின்றன.
இதில், நேற்று முன்தினம் நடந்த நான்காம் நாள் 'நாக் அவுட்' ஆட்டத்தில், ஆண்கள் பிரிவில் எட்டு போட்டிகளும், பெண்கள் பிரிவில், ஐந்து போட்டிகளும் நடந்தன. ஆண்களுக்கான போட்டியின் கடைசி ஆட்டத்தில், நாடிமுத்து அணியை எதிர்த்து புளூ ஸ்டார் அணி மோதியது.
தடுப்பாட்டத்திலும் தாக்குதல் ஆட்டத்திலும் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இதனால், மதில் மேல் பூனை என்பது போல, வெற்றி யார் பக்கம் என்பதில் கடைசி வினாடி வரை, 'திக்... திக்' என பரபரப்பு நிலவியது.
இறுதியில் புளூ ஸ்டார் அணி 42- - 41 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை சுவைத்தது.
முன்னதாக நடந்த போட்டிகளில் சக்ஸஸ், ஸ்ரீசாய், எஸ்.டி.ஏ.டி., ஸ்ரீ விக்னேஷ்வரா, மகேந்திரன் நினைவு, ஜவஹர் நகர், ஜெயராமன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
பெண்களுக்கான போட்டியில் ரெயின்போ, ஐ.சி.எப்., கோல்டன் ஈகிள், நித்யா, புரோலிக்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. இறுதிப்போட்டி மே 1ம் தேதி நடக்கிறது.

