/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வழிப்பறி திருடர்கள் கைது; 20 சவரன் தங்க நகை மீட்பு
/
வழிப்பறி திருடர்கள் கைது; 20 சவரன் தங்க நகை மீட்பு
வழிப்பறி திருடர்கள் கைது; 20 சவரன் தங்க நகை மீட்பு
வழிப்பறி திருடர்கள் கைது; 20 சவரன் தங்க நகை மீட்பு
ADDED : ஜூலை 20, 2024 02:58 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், தொடர்ந்து வழிப்பறி மற்றும் பூட்டிய வீடுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் குமரன் தலைமையிலான தனிப்படை போலீசார், 'சிசிடிவி' கேமரா மற்றும் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லுார் கூட்டுச்சாலையில், சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை அடுத்து, இருவரையும் உத்திரமேரூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளத்தைச் சேர்ந்த பிரசாந்த், 30, மற்றும் எலி என்கின்ற ரிஷி, 29, என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து, 20 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இருவரும் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.