/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கத்திமுனையில் 'கூகுள் பே'வில் பணம் பறித்த மூவர் கைது
/
கத்திமுனையில் 'கூகுள் பே'வில் பணம் பறித்த மூவர் கைது
கத்திமுனையில் 'கூகுள் பே'வில் பணம் பறித்த மூவர் கைது
கத்திமுனையில் 'கூகுள் பே'வில் பணம் பறித்த மூவர் கைது
ADDED : செப் 02, 2024 10:28 PM

ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர், 38, அதே பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வல்லக்கோட்டை வி.ஏ.ஓ., அலுவலம் அருகே நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், மன்சூரிடம் கத்தியை கட்டி மிரட்டி, 'கூகுள்- பே' வாயிலாக 3,000 ரூபாயை பரிவர்த்தனை செய்து அங்கிருந்து தப்பினர்.
இது குறித்து, ஒரகடம் போலீசில் மன்சூர் புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிந்த போலீசார்,அதே பகுதியைச் சேர்ந்த வாஞ்சிநாதன், 33,வல்லரசு, 25, ரமனா, 29, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்தனர்.