/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போதை மாத்திரை விவகாரத்தில் ரவுடியை கொன்ற மூவர் கைது
/
போதை மாத்திரை விவகாரத்தில் ரவுடியை கொன்ற மூவர் கைது
போதை மாத்திரை விவகாரத்தில் ரவுடியை கொன்ற மூவர் கைது
போதை மாத்திரை விவகாரத்தில் ரவுடியை கொன்ற மூவர் கைது
ADDED : மே 11, 2024 09:56 PM
கோயம்பேடு:போதை மாத்திரை விற்பதில் ஏற்பட்ட மோதலில், ரவுடியை ஓட ஓட விரட்டிக் கொன்ற வழக்கில், மூவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி, முகமது ஆதம், 32. இவர் மீது கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பைக் திருடுவதிலும் கை தேர்ந்தவர்.
நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள குடியிருப்பு பகுதி முட்புதர் ஓரம், வெட்டு காயங்களுடன் முகமது ஆதம் பிணமாகக் கிடந்தார். தகவல் கிடைத்து கோயம்பேடு போலீசார் அங்கு விரைந்து சென்று முகமது ஆதம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
முகமது ஆதம் பைக்கில் சென்றபோது, ஒரு கும்பல் வழிமறித்து, அவரை வெட்டிக்கொன்று தப்பியது விசாரணையில் தெரிந்தது.
தொடர் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், நேற்று இந்த வழக்கில் கோயம்பேடு, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த கமலேஷ், 32, திருநாவுக்கரசு,35, வெள்ளை செல்வா,33 ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
போதை மாத்திரை விற்கும் கும்பலைச் சேர்ந்த இவர்களை முகமது ஆதம் மிரட்டி வந்துள்ளார். அவர்களிடம் போதை மாத்திரைகளை பறித்து அவர் விற்று வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போதை மாத்திரை விற்கும் கும்பல், முகமது ஆதம் நடவடிக்கையை நோட்டமிட்டு, அவரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரிந்தது. இந்த வழக்கில் மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.