/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
30 கிலோ கஞ்சாவுடன் பூவையில் மூவர் கைது
/
30 கிலோ கஞ்சாவுடன் பூவையில் மூவர் கைது
ADDED : மே 06, 2024 05:06 AM
பூந்தமல்லி, : பூந்தமல்லியில், 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிறுத்தத்தில், மர்ம நபர்கள் கஞ்சாவுடன் திரிவதாக, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்தில் நேற்று முன்தினம் இரவு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகம்படும்படி சுற்றித் திரிந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல், 23, ராகுல், 21, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ராஜ், 22, என தெரிந்தது.
மேலும், அவர்கள் வைத்திருந்த பையில், 30 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.