/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரத கணேசர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
/
வரத கணேசர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
ADDED : செப் 09, 2024 05:23 AM

காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், சக்கரத்தாழ்வார் நகர், அம்மங்கார தெருவில், அக்னி தீர்த்த குளக்கரையில் வரத கணேசர் கோவில் உள்ளது. வரதராஜ பெருமாள் கோவிலின் புனித தீர்த்தங்களான பிரம்மதேவனால் உருவாக்கப்பட்ட ஏழு தீர்த்தங்களில், நான்காவதாக உருவாக்கப்பட்ட அக்னி தீர்த்தமாகும்.
இக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலுடன் வரலாற்றுடன் சிறப்பு பெற்றது. இதனால்,இந்த விநாயகர் வரத கணேசர் என அழைக்கப்படுகிறார்.
இக்கோவில் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. திருக்குட நன்னீராட்டு விழா எனப்படும் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 6ம் தேதி மேளதாளம் முழங்க முளைப்பாலிகை எடுத்து வரப்பட்டது.
நேற்று முன்தினம், மாலை 5:00 மணிக்கு முதற்கால வேள்வி வழிபாடு நடந்தது.
நேற்று, காலை 8:40 மணிக்கு கோவில் விமான கலசத்திற்கும், தொடர்ந்து மூலவர் திருமேனிக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு ெந்தமிழ் ஆகம திருக்குட நன்னீராட்டு பெருவிழா எனப்படும் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்துபல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.