/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா குறத்தி அலங்காரத்தில் திருவாத்தி அம்மன்
/
அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா குறத்தி அலங்காரத்தில் திருவாத்தி அம்மன்
அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா குறத்தி அலங்காரத்தில் திருவாத்தி அம்மன்
அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா குறத்தி அலங்காரத்தில் திருவாத்தி அம்மன்
ADDED : ஆக 07, 2024 02:37 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு கிராம தேவதை திருவாத்தி அம்மனுக்கு 10ம் ஆண்டு ஆடித் திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மூலவர் அம்மனுக்கு, குறி சொல்லும் குறத்தி அம்மன் அலங்காரமும், தொடர்ந்து ஜலம் திரட்டுதலும், உற்சவர் அம்மன் வீதியுலாவும் நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் ஊஞ்சல் சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 8:30 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது. இன்று இரவு 9:00 மணிக்கு சிங்காடிவாக்கம் ஏகாத்தம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம், திருக்காலிமேடு பிரதான சாலை, பாக்ராக் பேட்டை, உப்பு குளம் நாக கன்னியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவையொட்டி காலை 11:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலமும், அம்மன் குடம் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 5:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், கும்பம் படையலும் நடந்தது.
காஞ்சிபுரம் ரயில்வே சாலை தண்டுமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவையொட்டி நேற்று காலை, அம்மன் கரகம் வீதியுலா வந்தது.
மதியம் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழாவும், மாலை 4:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 9:00 மணிக்கு கும்பம் படையலிடப்பட்டு அம்மன் வர்ணிப்பு நடந்தது.