/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் வெங்குடியில் போக்குவரத்து நெரிசல்
/
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் வெங்குடியில் போக்குவரத்து நெரிசல்
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் வெங்குடியில் போக்குவரத்து நெரிசல்
சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் வெங்குடியில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஆக 15, 2024 10:49 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையை, சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், 141.59 கோடி ரூபாய் செலவில், வாலாஜாபாத் புறவழிச் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்கள், வெங்குடி கிராமத்தில் துவங்கும் மேம்பாலத்தின் மீது ஏறி, கிதிரிப்பேட்டை, ஊத்துக்காடு, புளியம்பாக்கம் மேம்பாலத்தின் வழியாக, இறங்கி செல்லும்.
செங்கல்பட்டு பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் புளியம்பாக்கம் கிராமம் அருகே, துவங்கும் மேம்பாலத்தின் மீது ஏறி, ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை வழியாக வெங்குடி கிராமத்தில் இறங்கி செல்லும்.
இந்த சாலை விரிவாக்க பணிகளுக்கு, மண்ணை ஏற்றி செல்ல டிப்பர் லாரிகள் பயன்படுத்துவதால், சாலையோரம் நிறுத்தப்படுகிறது.
குறிப்பாக, வாலாஜாபாத்- - வெங்குடி சாலையோரம் நிறுத்தப்படுவதால், காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி உள்ளது.
எனவே, சாலையோரம் நிறுத்தப்படும் டிப்பர் லாரிகளால், வாகன விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

