ADDED : ஆக 07, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், நேற்று, கால்நடை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமிற்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை விரிவாக்க கல்வி இயக்குனர் அப்பா ராவ் தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார், கால்நடை மண்டல இணை இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கால்நடை நல கல்வி மையம் இயக்குனர் சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கால்நடை பண்ணை விவசாயிகளிடையே, முயல், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு மற்றும் சந்தை படுத்தும் விதம் ஆகியவை குறித்து, விவாசயிகள் இடையே எடுத்துரைத்தார்.
இதில், 50க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் பங்கேற்றனர்.