/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விதைக்கரும்பு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
விதைக்கரும்பு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
விதைக்கரும்பு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
விதைக்கரும்பு உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 15, 2024 10:55 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில், கரும்பு விவசாயிகளுக்கான விதை கரும்பு உற்பத்தி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்த இம்முகாமில், தமிழ்நாடு சர்க்கரை துறை தலைமை கரும்பு பெருக்க அலுவலர்வெற்றிவேலன் பங்கேற்று, தமிழக அரசின் சர்க்கரை துறைக்கான சிறப்புதிட்டங்கள் குறித்தும், கரும்பு விவசாயிகளுக்கான அரசு சலுகைகள் குறித்தும் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து, விதைக்கரும்பு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து கரும்பு பெருக்க அலுவலர் ஜெகதீசன் எடுத்துரைத்தார்.
கரும்பில் அதிக மகசூல் எடுக்கத் தேவையான புதிய யுத்திகள், கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் கரும்பு விவசாயத்தில் கடைபிடிக்க வேண்டிய நேர்த்திகள் போன்றவை குறித்து இந்த முகாமில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
சாத்தணஞ்சேரி கரும்பு விவசாயி தனபால், கரும்பு சாகுபடி நிலங்களில் தண்ணீர் தேக்க அளவு முறை குறித்தும், பாய்ச்சலும் காய்ச்சலுமான சாகுபடி முறை குறித்து விளக்கினார்.
கரும்பாக்கம் பகுதி விவசாயி ராமலிங்கம், தன் கரும்பு நாற்றுப் பண்ணையில், விதை நேர்த்தி செயல்முறை பயிற்சி வழங்கினார்.
இதில், உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் வட்டார கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.