/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
15 பி.டி.ஓ.,க்களுக்கு பணியிடம் மாறுதல்
/
15 பி.டி.ஓ.,க்களுக்கு பணியிடம் மாறுதல்
ADDED : ஜூலை 02, 2024 09:25 PM
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலராக வஜ்ஜிரவேலு என்பவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு, ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அவருக்கு பதிலாக, அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த தாசபிரகாஷ் என்பவரை, புதிய வட்டார நிர்வாகம் நிர்வகிக்கும் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கிராம ஊராட்சிகளை நிர்வகிக்கும் முகமது சைபுதீன் என்பவருக்கு, ஆற்காடுவட்டாரத்தில் கிராம ஊராட்சிகளை நிர்வகிக்கும் பி.டி.ஓ.,வாக இடமாறுதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு, 13 பி.டி.ஓ.,க்களுக்கு இடமாறுதல் ஊரக வளர்ச்சி துறை அளித்துள்ளது.