/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை ஓரத்தில் ஆபத்தாக மின்மாற்றிகள்
/
சாலை ஓரத்தில் ஆபத்தாக மின்மாற்றிகள்
ADDED : மே 06, 2024 03:40 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில் இருந்து, கணபதிபுரம் கிராமம் வழியாக, சித்துார் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, புள்ளலுார், கணபதிபுரம்,ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினர், சித்துார் கிராமம் வழியாக, தக்கோலம், மாரிமங்கலம், பேரம்பாக்கம் ஆகிய பகுதிக்கு செல்கின்றனர்.
இதில், கணபதிபுரம் - சித்துார் இடையே, சாலை ஓரம் ஆபத்தாக மின் மாற்றிகள் உள்ளன. இந்த மின் மாற்றிகளை சுற்றிலும் தடுப்பு வேலி இல்லை.
இதனால், கணபதிபுரம் கிராமத்தில் இருந்து, சித்துார் கிராமம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சாலை ஓரம் ஆபத்தாக இருக்கும் மின் மாற்றிகளுக்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.