/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலை ஈச்சர் லாரியில் உறங்கிய டிரான்போர்ட் உரிமையாளர் உயிரிழப்பு

ADDED : மார் 12, 2025 08:43 PM
ஸ்ரீபெரும்புதுார்:சென்னை, போரூர், மதனந்தபுரம், லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன், 46; டி.என்.டி. மணி என்ற பெயரில் சொந்தமாக டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.
நேற்று காலை, சுங்குவார்சத்திரம் அருகே, எச்சூர் பகுதியில் உள்ள தாய் சும்மிட் ஆட்டோபார்ட்ஸ் எனும் தொழிற்சாலைக்கு லோடு ஏற்ற எய்ச்சர் லாரியில் சென்றார். வாகனத்தை தொழிற்சாலையில் நிறுத்திவிட்டு, வாகனத்தில் உள்ளே படுத்து உறங்கினார்.
பின்னர், மாலை வாகனத்தை எடுக்க சொல்லி, தொழிற்சாலை ஊழியர்கள், வாகனத்தில் ஏறி அவரை எழுப்பும் போது, அவர் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, எவ்வாறு நடராஜன் இறந்தார் என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.