/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அதிக கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்
/
அதிக கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்
அதிக கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்
அதிக கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்
ADDED : ஆக 26, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியிலிருந்து, கல்குவாரியிலிருந்து வரும் கனரக லாரிகள், அளவுக்கு அதிகமாக கட்டுமான பொருட்களை ஏற்றி செல்வதாக, நீண்ட நாட்களாகவே புகார் உள்ளது.
இதுதொடர்பாக, வாலாஜாபாத் தாசில்தார் கருணாகரன் தலைமையில், வாலாஜாபாத் போலீஸ் ஆய்வாளர் பிரபாகர் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உள்ளிட்டோர், தாங்கி சந்திப்பில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகமான பாரங்களை ஏற்றி வந்ததாக, மூன்று லாரிகளையும், தாசில்தார் கருணாகரன் பறிமுதல் செய்தார். மேலும், மூன்று லாரிகளுக்கும் சேர்த்து, 1.98 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.