/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்டீல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
/
ஸ்டீல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ஸ்டீல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ஸ்டீல் கழிவுகளை ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : பிப் 24, 2025 01:03 AM

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன.
இங்கு, காரின் உதிரி பாகங்கள் தயாரிக்க பல்வேறு நாடுகளில் இருந்து விலை உயர்ந்த ஸ்டீல் தகடுகள் கொண்டுவரப்பட்டு, கார் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அப்போது, வெளியேற்றப்படும் கழிவுகளை, பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். இந்நிலையில், இந்த கழிவுகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் திருமுக்கூடல், சிறுமையிலூர் ஆகிய பகுதிகளில் தினமும் அதிகளவில் செல்கின்றன.
அவ்வாறு செல்லும்போது தொழிற்சாலை கழிவுகள் மீது தார்ப்பாய் மூடாமல் லாரிகள் செல்கின்றன.
இதனால், வேகத்தடை உள்ள இடங்களில் லாரியில் இருந்து கழிவுகள் கீழே சிதறுகின்றன.
இதன்மீது வாகன செல்லும்போது ஸ்டீல் தகடு டயர்களை பதம் பார்ப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் நடந்து செல்வோரின் கால்களையும் கிழிக்கிறது. எனவே, லாரிகளில் தொழிற்சாலை ஸ்டீல் தகடு கழிவுகளை, தார்ப்பாய் மூடியவாறு எடுத்துச்செல்ல வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

