ADDED : ஜூன் 15, 2024 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 'ஹான்ஸ், விமல், கூல் லிப்' உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதையடுத்து, மொளச்சூரில் ஒரு கடையில், போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், குட்கா பொருட்கள் இருந்ததை அடுத்து, கடையில் உரிமையாளர் கந்தன், 52, என்பவரை கைது செய்தனர்.
அதேபோல், பொடவூர் கிராமத்தில் உள்ள பெட்டி கடையில், விற்பனைக்காக குட்கா பொருட்கள் வைத்திருந்த சரவணன், 80, என்பவரை போலீசார் கைது செய்தனர்.