/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல்:இருவருக்கு சிறை தண்டனை
/
சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல்:இருவருக்கு சிறை தண்டனை
சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல்:இருவருக்கு சிறை தண்டனை
சிறுமியரிடம் பாலியல் அத்துமீறல்:இருவருக்கு சிறை தண்டனை
ADDED : மார் 29, 2024 09:28 PM
சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் தாயை இழந்த 9 வயது சிறுமி, தன் அத்தையுடன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஜன., 19ம் தேதி, சிறுமி பக்கத்து வீட்டில் 'டிவி' பார்க்க சென்றுள்ளார். அப்போது, அந்த வீட்டில் வசிக்கும் ரவி, 51, என்பவர், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து விசாரித்த திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசார், ரவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கை நீதிபதி எம்.ராஜலட்சுமி விசாரித்தார். போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ''குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், ரவிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என தீர்ப்பளித்தார்.
* எம்.கே.பி., நகர் பகுதியில் வசித்து வந்த மனநலம் குன்றிய 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, கொடுங்கையூரைச் சேர்ந்த ஷைன்ஷா, 38, என்பவருக்கு ஆயுள் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டார்.

