/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆட்டோ மீது லாரி மோதி இருவர் பலி
/
ஆட்டோ மீது லாரி மோதி இருவர் பலி
ADDED : ஏப் 30, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தயாளன், 35, ஆட்டோ ஓட்டுனர். இவர், தன் ஆட்டோவில், பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார், 50. என்பவருடன், நேற்று, கீரைமண்டபம் பகுதியில் இருந்து, ஓரிக்கை நோக்கி சென்றார்.
அப்போது, ஓரிக்கை பகுதியில் இருந்து, கீரை மண்டபம் நோக்கி, டிப்பர் லாரி, கீழ்கேட் பகுதியில் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில், குமார் இறந்தார். காயமடைந்தவரை மீட்டு, அருகில் இருந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தயாளன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

