/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மத்திய அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
/
மத்திய அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு
ADDED : மார் 11, 2025 12:32 AM

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, மும்மொழி கொள்கை குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு தமிழக தி.மு.க.,- -- எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக எம்.பி.,க்கள் நாகரிகமற்றவர்கள் என, அவர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுதும் நேற்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் ஒரு பகுதியாக, தி.மு.க.,வின் காஞ்சிபுரம் மாநகர செயலர் தமிழ்ச்செல்வன் தலைமையில், காஞ்சிபுரம் காந்தி ரோட்டில், நேற்று மதியம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை தி.மு.க.,வினர் எரித்தனர்.
வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில், பேரூராட்சி தி.மு.க., செயலர் பாண்டியன் தலைமையில், தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரித்து, உருவ பொம்மையை அவமதிப்பு செய்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் பேருந்து நிலையத்தில், தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் தலைமையில், தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை, நேற்று, மாலை 4.30 மணியளவில் எரித்தனர். அதேபோல, உத்திரமேரூர் பேருந்து நிலையத்திலும் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
- நமது நிருபர் குழு -